பெங்களூருவில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

பெங்களூரில் இருந்து ஒசூர் வழியாக சேலத்திற்கு கடத்த இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூருவில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
x
பெங்களூரில் இருந்து ஒசூர் வழியாக சேலத்திற்கு கடத்த இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை போலீசார்  பறிமுதல் செய்தனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து ஒசூர் வழியாக குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக ஓசூர் போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் நல்லூர் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், குட்கா ஏற்றி வந்த வாகனத்தை மடக்கி பிடித்தனர். 60 சாக்கு மூட்டைகளில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்த போலீசார், ஸ்ரீனிவாசன் மற்றும் செந்தில் ஆகியோரை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்