சசிகலாவுக்கு எதிரான வழக்கை கைவிட முடியாது - வருமான வரித்துறை

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால், 40 லட்சம் ரூபாய் வருமான வரியை செலுத்த கோரிய உத்தரவை கைவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சசிகலாவுக்கு எதிரான வழக்கை கைவிட முடியாது - வருமான வரித்துறை
x
1994 - 1995 ஆம் ஆண்டு கணக்கில் காட்டாமல் சொத்துக்களை வாங்கிய சசிகலா, வருமான வரியாக 48 லட்சம் ரூபாயை செலுத்தும்படி 2002 ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவிட்டது.இந்த உத்தரவை வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்த நிலையில், வருமான வரித்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நிலுவையிலிருந்த இந்த வழக்கில், கடந்த ஆண்டு சசிகலா தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம், ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள வரி பாக்கி அல்லது அபராதம் தொடர்பான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டி, தமக்கு எதிரான வழக்கையும் திரும்பப் பெற வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், சத்திக்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டு உள்ளதால், வரியை கைவிடும் சுற்றறிக்கை சசிகலாவுக்கு பொருந்தாது என வருமான வரித்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து சசிகலா தரப்பு விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள்,வழக்கு விசாரணையை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்