"நகை கடன், பயிர் கடனில் முறைகேடு" - அமைச்சர் ஐ.பெரியசாமி

அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
நகை கடன், பயிர் கடனில் முறைகேடு - அமைச்சர் ஐ.பெரியசாமி
x
அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, பயிர்க்கடன் தள்ளுபடியை பொறுத்தவரை 81 சதவிகிதம் பேருக்கு ரசீது வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 

சாகுபடி பரப்பளவு, பயிருக்கு வழங்க வேண்டிய கடனை விட பல மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாகவும் இதன் மூலம் 516 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

இதேபோல் சேலம் மற்றும் நாமக்கல்லில் மட்டும் 503 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் கணினிகள் உள்ள நிலையில் பயிர்க்கடன் வழங்கிய விபரங்களும், வசூலித்த தொகையும் கணினியில் பதிவேற்றாமல் உள்ளது என்று தெரிவித்தார்.

5 பவுன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 13 லட்சத்து 91 ஆயிரத்து 656 பேர் பல வங்கிகளில் 5 ஆயிரத்து 896 கோடி ரூபாய் கடன் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். 

பல்வேறு மாவட்டங்களில் ஒரே நபருக்கு பல முறை நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், முறைகேடாக நகைக்கடன் பெற்றவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐ.பெரியசாமி கூறினார்.

தகுதியுள்ள நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான முடிவை முதல்வர் எடுப்பார் எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்தார். கூட்டுறவு வங்கிகளில் வட்டிக்காரர்கள் ஆக்கிரமிப்பை ஒழித்து, தவறு நடைபெறாமல் இருப்பது, பொது நீதியாக இருக்கும் எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்