சிறுவர்களிடம் புகையிலை பயன்பாடு 9.6%, பெண்களிடம் புகையிலை பயன்பாடு 7.4 % - 24 வது இடத்தில் தமிழகம் -மத்திய அரசு

புகையிலையை அதிகமாக பயன்படுத்துவதில் தமிழகம் 24 வது இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிறுவர்களிடம் புகையிலை பயன்பாடு 9.6%, பெண்களிடம்  புகையிலை பயன்பாடு 7.4 % - 24 வது இடத்தில் தமிழகம் -மத்திய அரசு
x
தேசிய அளவில் இளைஞர்களிடையே உள்ள புகையிலை பயன்பாடு குறித்த 2019 ஆம் ஆண்டின் உண்மை ஆய்வறிக்கை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.


 அப்போது, புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசிய அவர், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றார். 


கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சிறுவர்களிடையே 9.6 சதவீதமாகவும், பெண்களிடையே 7.4 சதவீதமாகவும் புகையிலை பயன்பாடு இருந்துள்ளது. 

புகையிலையை புகைத்தல் 7.3 சதவீதமாகவும், பிற புகையிலை பொருட்கள் நுகர்வு 4.1 சதவீதமாகவும் இருந்திருக்கிறது. 

மேலும் மாநிலங்கள் அளவில் அதிக புகையிலை பயன்பாட்டில் அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உள்ளன. 

இந்த வரிசையில் தமிழகம் 4.8 சதவீத பயன்பாட்டுடன் 24 வது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்