"ஹாக்கி வீராங்கனை வந்தனாவின் புகழை மீட்போம்" - சு.வெங்கடேசன்( எம்.பி.)

ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா சாதி ரீதியாக விமர்சிக்கப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்று மதுரை எம்.பி. வெங்கடேசன் கடிதம் எழுதி உள்ளார்.
x
ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா சாதி ரீதியாக விமர்சிக்கப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்று மதுரை எம்.பி. வெங்கடேசன் கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் இந்தியாவை அரையிறுதி வரை அழைத்துச் சென்ற வந்தனா, சாதிய ரீதியாக விமர்சிக்கப்பட்டது அநீதி என்றும், தென் ஆப்ரிக்காவுடனான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து, இந்தியாவின் வெற்றிக்கு பங்களித்தது வந்தனாதான் என்றும் கூறி உள்ளார். சாதிய ரீதியாக வந்தனா விமர்சிக்கப்பட்ட சம்பவம், விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் இந்தியாவின் மதிப்பை குறைத்துள்ளது என்றும்,.குற்றவாளிகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரகாண்ட் மாநில முதல்வருக்கு கடிதம் எழுதுமாறும் கேட்டுக் கொண்டு உள்ளார். வந்தனா வீட்டிற்கு நேரில் சென்று தேசமே, பின்னால் நிற்பதாக ஆறுதல் சொல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ள அவர், வந்தனாவுக்கு நீதி கிடைக்க அனைவரின் குரலும் ஒரு சேர எழும்பட்டும் என்றும் தன் கடிதத்தில் கூறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்