சென்னையில் கொசுப்புழு அடர்த்தி 89% குறைவு - சென்னை மாநகராட்சி

சென்னையில் உள்ள நீர்வழிப்பாதைகளில் கொசுப்புழு அடர்த்தி 89% குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
x
சென்னையில் பருவமழைக் காலங்களில் ஏற்படும் டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆட்கள் செல்ல முடியாத கால்வாய்கள் மற்றும் நீர் வழித்தடங்களில் ட்ரோன் இயந்திரங்களைக் பயன்படுத்தி கொசுவை ஒழிக்கும் மருந்து தெளிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக, 113 கி.மீ நீளத்திற்கான நீர்வழிப்பாதைகள் மற்றும் கால்வாய்களில் ட்ரோன் மூலம் மருந்து தெளித்ததில் கொசுபுழு வளர்ச்சி 89 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ட்ரோன் கொண்டு கொசு மருந்து தெளிப்பதை தொடர முடிவு செய்யதுள்ளதையும் மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. மேலும், கடந்த 3 மாதங்களில் சென்னையில் மட்டும் 61 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்