கொந்தகை அகழாய்வு பணிகள் - மரக்கைப்பிடியுடன் இரும்பு வாள் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வில், மரக்கைப்பிடியுடன் இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டது.
x
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 7 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வில் இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த நிலையில், தற்போது ஒரு குழியில் இருந்த முதுமக்கள் தாழியில், மரக் கைப்பிடியுடன் கூடிய இரும்பு வாள் கிடைத்துள்ளது. மேலும் அந்த முதுமக்கள் தாழியில் மனித எலும்புகள், சுடுமண் பாத்திரங்களும் இருந்துள்ளது. அத்துடன், இந்த வாள் ஆய்வு செய்ய அமெரிக்கா புளோரிடாவின் பீட்டா அனாலிட்டிகல் ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்