"3-வது அலை வராமல் தடுப்போம்" - முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசு சார்பில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
x
மாநில சுகாதாரத்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில், இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்து, உறுதி மொழி ஏற்றார். தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வராமல் தவிர்க்க உறுதி மொழி ஏற்கப்பட்டது. கொரோனா விழிப்புணர்வு பிரசார தொடக்க விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிரு​ஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்