பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

எதிர் நீச்சல், இருகோடுகள், பாமா விஜயம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவால் காலாமானார்.
x
மறைந்த மூத்த நடிகர்கள் ஜெமினி கணேசன், எம்ஜிஆர் உள்பட பல நடிகர்களுடன் நடித்தவர் ஜெயந்தி. இவர் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்புக்காக பல முறை கர்நாடக மாநில அரசின் விருதுகளை வென்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகியிருந்தார். இதனிடையே உடல்நலக் குறைவால் அவர் மரணமடைந்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்