"எது உண்மை என தெளிவுபடுத்தவேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

"எது உண்மை என தெளிவுபடுத்தவேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
எது உண்மை என தெளிவுபடுத்தவேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
"எது உண்மை என தெளிவுபடுத்தவேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் 

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 13 பேர் உயிரிழப்பு என்று முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்த கருத்து உண்மையா? என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால், செங்கல்பட்டில் 13 பேர் உயிரிழந்ததாக, முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறியுள்ளார்.இந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பே இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் கூறுவதாகவும்,கொரோனா தொற்று தீவிரமாக இருந்தபோது கூட, ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து உடனடியாக ஆராய்ந்து, உண்மை நிலையை தமிழ்நாட்டு க்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்