இந்திய கடல்சார் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

இந்திய மீனவர்களின் வாழ்வாதரத்தைப் பாதிக்கும் இந்திய கடல்சார் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
x
இந்திய மீனவர்களின் வாழ்வாதரத்தைப் பாதிக்கும் இந்திய கடல்சார் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய கடல்சார் மீன்வள மசோதாவில் குறிப்பிட்ட விதிகள் கடலோர மீனவர் சமூகங்களின் நலனுக்கு எதிராக உள்ளதாக கூறியுள்ளார். மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை மீறும் சில உட்பிரிவுகள் உள்ளதாகவும் கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார். மேலும் மசோதாவில் உள்ள சில பிரிவுகள் மீனவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துதல், சிறையில் அடைத்தல், அபராதம் விதித்தல் உள்ளிட்ட  மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளதால் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளார். அனைத்து தரப்பு மக்களுடன் விவாதம் மற்றும் ஆலோசனைகள் மேற்கொண்டபிறகு புதியதொரு மசோதாவை நாடாளுமன்றத்தில் பின்னர் தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளார். எனவே தற்போதுள்ள மசோதாவை நிறைவேற்றும் முயற்சியினை தொடர வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுகொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்