"முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.472 கோடி வந்துள்ளது" - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
x
சென்னையில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இணையதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையை பொதுமக்களுக்கு அறிவிக்க  இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.இதுவரை முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு 472 கோடி ரூபாய் நிதி வந்துள்ளதாக தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்