எச்சரிக்கையை அலட்சியம் செய்த எஸ்பிஐ வங்கி

வங்கி கொள்ளை கும்பல் குறித்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த எச்சரிக்கை கடிதத்தை தமிழகத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிகள் கோட்டை விட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
எச்சரிக்கையை அலட்சியம்  செய்த எஸ்பிஐ வங்கி
x
சென்னையில் கடந்த மாதம் பல்வேறு எஸ்பிஐ ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சுமார் ஒரு கோடி ரூபாய் வரை பணத்தை கொள்ளை கும்பல் திருடிச் சென்றது. ஹரியானாவின் மேவாட் மாவட்டத்தை சேர்ந்த கும்பல் இதில் ஈடுபட்டது உறுதியான நிலையில் கொள்ளையர்கள் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் வங்கி அதிகாரிகள் மற்றும் கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொள்ளை சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே மகாராஷ்டிரா மாநிலத்தில் இதே கும்பல் கைவரிசை காட்டியிருக்கிறது. இதன் பின்னர்  தமிழகம் வந்த கொள்ளையர்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரண்டு நாட்களாக சென்னை நகர் முழுவதும் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொள்ளை நடந்த உடனே தமிழகத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிகளுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கடந்த 16ஆம் தேதியே எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்ட கடிதத்தை தமிழக எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் திங்கட்கிழமையே பார்த்துள்ளனர். இந்த இடைவெளியில் ஹரியானா கும்பல் தங்கள் கைவரிசையை காட்டி விட்டு சென்றதும் விசாரணையில் உறுதியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்