"மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என, அந்த மாநில முதல்வர் எடியூரப்பாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
x
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், மேகதாது அணையால், தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நீரின் அளவு குறையும் என கூறியுள்ளார். பெங்களூரூ மக்களின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் போதுமான கட்டமைப்பு வசதிகள் உள்ளதாகவும், குடிநீருக்காக ஏற்கனவே போதிய கட்டமைப்புகள் உள்ள நிலையில் இத்திட்டத்தை ஏற்க இயலாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்டுவதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்ற கருத்தை ஏற்க இயலாது என்றும் குறிப்பிட்டுள்ள அவர்,  
மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.  தமிழகம் கர்நாடகம் இடையே நல்லுறவு, தழைக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேக தாது அணை திட்டத்தை ஆதரிக்குமாறு, நேற்று, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கடிதம் எழுதியிருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். Next Story

மேலும் செய்திகள்