நீட் ஆய்வு குழுவுக்கு எதிரான வழக்கு -தமிழக அரசு பதில்

நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நீட் ஆய்வு குழுவுக்கு எதிரான வழக்கு -தமிழக அரசு பதில்
x
நீட் தேர்வு பாதிப்புகளை ஆய்வு செய்ய  நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.இந்த நிலையில் இந்த குழுவை ரத்து செய்யக் கோரி, தமிழக பாஜக பொது செயலாளர் கரு. நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கில், தமிழக  மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில், நீட் தேர்வு பாதிப்பு குறித்து  நீதிபதி ஏ.கே.ராஜன் குழு, இன்னும் அரசுக்கு அறிக்கை அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அறிக்கை அளிக்காத நிலையில், குழு நியமனத்தை எதிர்த்து விளம்பரத்திற்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நியமனத்தில் அரசியல்சாசனத்தின் எந்த அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை என்றும்,மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டே குழு நியமிக்கப்பட்டு உள்ளதாக திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாஜக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்