ஆறுமுகசாமி ஆணையத்திற்கான செலவு ரூ.2.83 கோடி - ஆர்டிஐ மூலம் வெளியான விவரங்கள்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தற்போது வரை 2 கோடியே 83 லட்சம் செலவாகி இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது
x
பெங்களூருவைச் சேர்ந்த ஆர்.என்.ராஜன் என்பவர் இது தொடர்பாக ஆர்டிஐவில் விவரம் கேட்டுள்ளார். அவருக்கு பதிலளித்துள்ள ஆர்டிஐ மேல்முறையீட்டு அலுவலர் கோமளா, 23 மாதங்களாக ஆறுமுகசாமிக்கு 85 லட்சம் ரூபாயும், ஆணையத்தின் செயலாளருக்கு 46 லட்சம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.  பணியாளர்கள், வாகன போக்குவரத்து செலவிற்கு 1.52 கோடி என மொத்தம்  2 கோடியே 83 லட்சத்து 29 ஆயிரத்து 532 செலவாகி இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்