பைக் மீது கார் மோதி விபத்து - அடையாளம் தெரியாத ஜோடி குறித்து விசாரணை

மாமல்லபுரம் அருகே கார் மோதிய விபத்தில், அடையாளம் தெரியாத பெண் உயிரிழந்தார். அவருடன் வந்த இளைஞர் ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
x
செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற ஜோடி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அடையாளம் தெரியாத பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கை ஓட்டிவந்த வாலிபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். கார் மோதிய விபத்தில், பைக்கில் வந்த இளம்ஜோடி தூக்கி வீசப்பட்டதாகவும், அவர்கள் மாமல்லபுரம் நோக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது. இ.சி.ஆர். சாலையில்  விபத்தில் சிக்கிய இந்த ஜோடி குறித்த விவரங்கள் தெரியவில்லை. இருசக்கர வாகன பதிவெண் மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்