அரசுப் பள்ளியில் கணிசமாக உயரும் மாணவர் சேர்க்கை - புதிய மாணவர்களுக்கு ரூ.1000 வைப்பு தொகை-பரிசு
அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வைப்புத் தொகை ஆயிரம் மற்றும் குலுக்கல் முறையில் பத்தாயிரம் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரத்து 500 புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை, 55 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில், தலைமை ஆசிரியருடன் இணைந்த முன்னாள் மாணவர்கள்,
புதிதாக சேரும் மாணவர்களின் பெயரில் தலா ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை அறிவித்தனர். மேலும், பெற்றோர்களை ஊக்கப்படுத்த குலுக்கல் முறையில், பத்தாயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்குவதாகவும் அறிவித்தனர். தந்தி டிவியில் இந்த செய்தி வெளியான தாக்கம் எதிரொலியாக, மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனிடையே, சென்னையைச் சேர்ந்த ரூஸ்வெல்ட் என்பவர், பள்ளிக்கு ஆயிரத்து 500 புத்தகங்களை பள்ளிக்கு வழங்கியுள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவரான அவர், கன்னிமாரா லைப்ரரி கவுரவ தலைவராகவும் ஓய்வு பெற்றுள்ளார்.
Next Story
