மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத கொரோனோ தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
x
தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத கொரோனோ தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள், கோவின் செயலியில் பதிவு செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன நிலையில், மீதம் உள்ள தனியார் மருத்துவமனைகளும் பதிவு செய்ய சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
கோரிக்கை அளித்த 3 நாட்களுக்குள் தடுப்பூசிக்கான தொகையை, தனியார் மருத்துவமனைகள் செலுத்த வேண்டும் என்றும்,
புதிய மருத்துவமனைகளுக்கு படுக்கைகள் மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறியுள்ளது.
அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் தினசரி தடுப்பூசி பயன்பாடு தொடர்பான தகவலை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், இதன் மூலம் தடுப்பூசி வீணாவதை கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்