ஊரடங்கு தளர்வு குறித்து நாளை ஆலோசனை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
x
ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு வரும் 28ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதார துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம், நாளை காலை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா, வேண்டாமா என்பது தொடர்பாகவும், மேலும் சில தளர்வுகள் வழங்குவதும் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்