நீட் தேர்வு பாதிப்பு - நடிகர் சூர்யா வேண்டுகோள்

நீட் தேர்வு பாதிப்பு குறித்து தமிழக அரசு நியமித்துள்ள குழுவிடம் மாணவர்களின் பெற்றோர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீட் தேர்வு பாதிப்பு - நடிகர் சூர்யா வேண்டுகோள்
x
நீட் தேர்வு பாதிப்பு - நடிகர் சூர்யா வேண்டுகோள்

நீட் தேர்வு பாதிப்பு குறித்து தமிழக அரசு நியமித்துள்ள குழுவிடம் மாணவர்களின் பெற்றோர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.அகரம் ஃபவுண்டேஷன் சார்பாக  நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் நீட் தேர்வு ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடுவதாகவும், அது சமூக நீதிக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளில் படிக்கும் எளிய குடும்பத்தை சேர்ந்த 20 சதவீத மாணவர்களே உயர்கல்விக்கு செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.நீட் தேர்வு வைக்கப்படுவதன் மூலம் மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்த  ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டதாகவும், அதன் வடுக்கள் காலத்திற்கும் மறையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவு தேர்வுகள் ஆபத்தானவை  என்று கூறியுள்ள நடிகர் சூர்யா , நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து தமிழக அரசு நியமித்துள்ள குழுவிடம் மாணவர்களுக்கான பாதிப்புகள் குறித்து அகரம் புவுண்டேஷன் பதிவு செய்வதாக தெரிவித்துள்ளார். இதேபோல் பொது மக்களும்  நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான அக்குழுவிடம் neetimpact2021@ gmail.com  என்னும் மின்னஞ்சலுக்கு  வரும் 23ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்