அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்... தனி விமானத்தில் தோஹா செல்கிறார்

மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.அண்ணாத்த படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில், வெளிநாடு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்தார்.
x
அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்... தனி விமானத்தில் தோஹா செல்கிறார்

மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.அண்ணாத்த படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில், வெளிநாடு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள ரஜினிகாந்த், அவ்வப்போது அமெரிக்கா சென்று முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பயணத்தை தவிர்த்து வந்தார். தற்போது அமெரிக்காவில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில் சென்னையிலிருந்து ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டார். கத்தாருக்கு தனி விமானத்தில் செல்லும் அவர் அங்கிருந்து பயணிகள்  விமானத்தில், அமெரிக்கா செல்ல உள்ளார். மருத்துவ பரிசோதனைக்குப் பின் ஜூலை 8ம் தேதி ரஜினிகாந்த் இந்தியா திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது 

Next Story

மேலும் செய்திகள்