பப்ஜி மதன் பற்றி வெளியாகும் தகவல்... பணம் சம்பாதித்த ஃபாலோயர்கள்

பப்ஜி மதன் தன்னுடைய யூட்யூப் சேனல்கள் மூலமாக மாதம் 6 லட்ச ரூபாய் வரை சம்பாதித்தது விசாரணையில் தெரியவந்தது.தன்னை பின்தொடரும் பாலோயர்களால் மதனுக்கு அதிகளவில் பணமும் வந்துள்ளது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
பப்ஜி மதன் பற்றி வெளியாகும் தகவல்... பணம் சம்பாதித்த ஃபாலோயர்கள்
x
பப்ஜி மதன் பற்றி வெளியாகும் தகவல்... பணம் சம்பாதித்த ஃபாலோயர்கள்  

பப்ஜி மதன் தன்னுடைய யூட்யூப் சேனல்கள் மூலமாக மாதம் 6 லட்ச ரூபாய் வரை சம்பாதித்தது விசாரணையில் தெரியவந்தது.தன்னை பின்தொடரும் பாலோயர்களால் மதனுக்கு அதிகளவில் பணமும் வந்துள்ளது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதன்படி அவர் மாதம் 6 லட்ச ரூபாய் வரை பணம் சம்பாதித்துள்ளார். அதுமட்டுமின்றி அவரை பின்தொடர்ந்த ஃபாலோயர்கள் பலரும் மாதம் 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை பணம் சம்பாதித்துள்ளனர். தனக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பப்ஜி மட்டுமின்றி தடை செய்யப்பட்ட கொரிய விளையாட்டு செயலிகளையும் பதிவிறக்கம் செய்து விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்காக 3 செல்போன் நம்பர்களை பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 

Next Story

மேலும் செய்திகள்