இரண்டாம் தவணை கொரோனா நிதி - ரூ.2,000 வழங்கும் பணி தொடக்கம்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணையான 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.
x
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் தவணையாக 2 ரூபாய் பணம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் பணி தமிழகம் முழுவதும் இன்று காலை தொடங்கியது.

* சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், இரண்டாம் தவணை நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை  தொடங்கிவைத்தார்.

* கோவையில் வடவள்ளி கூத்தாண்டவர் கோயில் வீதியில் நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பயனாளிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

* விருத்தாசலத்தில் இரண்டாம் தவணை கொரோனா நிதி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தொடங்கி வைத்தார். இதேபோல், சென்னை தங்கசாலை ஏழுகிணறு பகுதியில் நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்