மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.
x
தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். 8 கண் மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த நீரில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பிட்ட நாளில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், தஞ்சை, திருச்சி, கடலூர், நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள 5 லட்சத்து 21 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும். தொடர்ந்து, 2ஆவது ஆண்டாக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்