கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
x
தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர துவங்கியது. வடமாநிலங்களின் பல நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியது. இந்நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக புதிய உச்சமாக கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 4 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால்  வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து, லாரிக‌ளின் வாட‌கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைந்த காய்கறிகளை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்