"தமிழ்நாட்டில் வெறும் 19% மட்டுமே தடுப்பூசி" - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அறிக்கை

மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறுவதில் தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டி வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புகார் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வெறும் 19% மட்டுமே தடுப்பூசி - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அறிக்கை
x
மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறுவதில் தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டி வருவதாக அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டை விட பின் தங்கிய மாநிலங்களான பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் 24 விழுக்காடு மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், தமிழ்நாட்டில், வெறும் 19 விழுக்காடு மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாக  தெரிவித்துள்ளார். தடுப்பூசி விஷயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி, பிரதமரை நேரில் சந்தித்து இந்த ஆண்டு இறுதிக்குள், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்