இணையதளத்தில் கோயில் ஆவணங்கள் - அடுத்தடுத்து அதிரடி காட்டும் அறநிலையத்துறை

பிரதான கோயில்களின் சொத்து விவரங்களை பொதுமக்களும் தெரிந்துகொள்ளும்படி, இணையத்தில் வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளது, இந்து அறைநிலையத்துறை... இது குறித்து விரிவாக தற்போது பார்க்கலாம்....
x
இந்திய அளவில் 80 சதவீத கல்வெட்டுகள் தமிழக கோயில்களில் இருந்து கிடைக்கப்பெற்றவை... தமிழரின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் தொடர்ந்து பிரதிபலிப்பவை தான் தமிழக கோயில்கள் என்றால் அது மிகையாகாது.... பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஊர்களில் உள்ள கோயில்களின் சொத்துவிவரங்களை  தெரிந்து கொள்வது மட்டுமின்றி, அவற்றில் குறை எதுவும் இருப்பின் கருத்துக்களை பதிவிடவும் ஏற்பாடு செய்துள்ளது, இந்து அறநிலைத்துறை.... இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களை கொண்ட தமிழகத்தில், இந்த கோயில்களுக்கு சொந்தமான நன்செய், புன்செய் நிலங்கள் என 4 லட்சத்து 78 ஆயிரத்து 348 ஏக்கர் நிலங்கள் உள்ளன.இதே போல் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 22,600 கட்டிடங்கள், சுமார் 33 ஆயிரம் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதுதவிர 1 லட்சத்து 23 ஆயிரம்  பேருக்கு விவசாய நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இவை மூலம் ஆண்டுக்கு 58.68 கோடி ரூபாய் வருவாயும் அரசுக்கு கிடைக்கிறது..இந்த நிலையில், வருவாய்த்துறையின் ஆவணங்களுடன் ஒத்துப்போகின்ற 3 லட்சத்து 43 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்களின் விவரங்கள், அதாவது 72 சதவீத கோயில் நிலங்களின் விவரங்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது...இதனை www.hrce.tn.gov.in  எ    ன்ற இந் து   சமய     அறநிலையத்துறையின் இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் பார்வையிடலாம்... இதில் அதிக சொத்து ஆவணங்களை கொண்ட கோயிலாக திகழ்கிறது, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில். இந்த கோயிலுக்கு சொந்தமான ஆயிரத்து 145 சொத்து ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன...அதற்கு அடுத்தப்படியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 681 சொத்து ஆவணங்களும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான 645 சொத்து ஆவணங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் அனைத்தும் வருவாய் துறையின் பட்டா அளவைப் பதிவேடு, நகர நில அளவை பதிவேடு என தனி தனி பதிவேடுகளாக உள்ளன.இந்து அறநிலையத்துறையின் இந்த நடவடிக்கையை பெரிதும் வரவேற்றுள்ள இந்து தமிழர் பேரவை, இதன் மூலம் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் சிக்குவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கிறது.ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் போது, அவற்றை நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருப்பதை சுட்டி காட்டும் சமூக ஆர்வலர்கள், ஆக்கிரமிப்பு நிலங்களில் கிராமப்புற மருத்துவமனை, முதியோர் காப்பகம், பள்ளிக்கூடங்களை கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கையும் விடுக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்