"11-ம் வகுப்பு சேர்க்கை - அவகாசத்தை நீட்டிப்பீர்" - பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டிகுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து உள்ளார்.
11-ம் வகுப்பு சேர்க்கை - அவகாசத்தை நீட்டிப்பீர் - பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை
x
"11-ம் வகுப்பு சேர்க்கை - அவகாசத்தை நீட்டிப்பீர்" - பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை 

11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டிகுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து உள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 11-ம் வகுப்பு நுழைவுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது சரியான நடவடிக்கை என்றும்,ஆனால், மாணவர்களை மீண்டும், மீண்டும் குழப்பக் கூடாது என்றும் கூறி உள்ளார்.9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,ஆனால்,  9-ம் வகுப்புக்கு கடந்த ஆண்டு, இறுதித் தேர்வு நடத்தப்படாததால்,  இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.எந்தெந்த தேர்வுகளின் மதிப்பெண்கள் மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படும் என்பது குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என கூறியுள்ள ராமதாஸ்,..உயர்நிலைப்பள்ளிகளில் படித்து மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, அதிகாரப்பூர்வ மதிப்பெண் பட்டியல் வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.இவை அனைத்தையும் முடித்து ஜூன் 3-வது வாரத்திற்குள் வகுப்புகளை தொடங்குவது சாத்தியமில்லை என்பதால்,11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்