"ஒரு கஞ்சா பொட்டலம் 500" - Lockdown-ல எங்கையும் கிடைக்காது - கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்!

திருப்பூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
x
திருப்பூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. காங்கேயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஊரடங்கின் போது மது, குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. இதனிடையே கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை வைத்துக் கொண்டு அதனை 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரிம் இளைஞர்கள் சிலர் பேரம் பேசி வாங்குவதும் வீடியோவில் பதிவாகி உள்ள நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்