உணவுக்காக காத்திருக்கும் குரங்குகள் - பழங்கள் கொடுத்து பசிதீர்த்த ஆட்டோ ஓட்டுநர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உணவின்றி தவித்த குரங்குகளுக்கு, ஆட்டோ ஓட்டுநர் பழங்கள் வழங்கினார்.
x
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உணவின்றி தவித்த குரங்குகளுக்கு, ஆட்டோ ஓட்டுநர் பழங்கள் வழங்கினார். குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், குரங்குகள் சுற்றித் திரிவது வழக்கம். சுற்றுலா பயணிகள் தின்பண்டங்கள் கொடுத்து இந்த குரங்குகளை பழக்கியதால், அவை சாலையிலேயே உணவுக்காக காத்திருக்கின்றன. தற்போது, ஊரடங்கு காரணமாக மலைப்பாதை வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், உணவின்றி தவித்த குரங்குகளுக்கு, குன்னூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் என்பவர், 20 கிலோ எடை அளவிலான பழங்களை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்