இறப்பு பதிவிற்கான காலதாமதக் கட்டணத்திலிருந்து விலக்கு - தவிர்க்க முடியாத சூழலில் இறப்புகள் நிகழ்ந்துவிடுகிறது

பிறப்பு, இறப்பு பதிவிற்கான காலதாமதக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இறப்பு பதிவிற்கான காலதாமதக் கட்டணத்திலிருந்து விலக்கு - தவிர்க்க முடியாத சூழலில் இறப்புகள் நிகழ்ந்துவிடுகிறது
x
பிறப்பு, இறப்பு பதிவிற்கான காலதாமதக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  கொரோனா நோய் காரணமாக நமது மருத்துவர்களின் சீரிய முயற்சிகளையும் மீறி தவிர்க்க முடியாத சூழலில் இறப்புகள் நிகழ்ந்துவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இறப்பு பதிவு காலதாமதத்திற்கு வசூலிக்கப்படும் கட்டணம், சுமையை ஏற்படுத்தி வருவதாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும்,

எனவே இக்கட்டணத்திலிருந்து பொது மக்களுக்கு விலக்களிக்கப்படுவதாகவும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

மேலும், காலதாமதக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 2020 ஜனவரி முதல் நிகழ்ந்த பிறப்பு / இறப்பு பதிவுக்கான காலதாமதக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும், இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பீடை தமிழ்நாடு அரசே ஈடுசெய்யுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்