மேட்டூர் அணையில் நீர்வரத்து உயர்வு - நீர்வரத்து 881 கன அடியாக உயர்வு

மேட்டூர் அணையில் இருந்து வரும் 12-ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், அணையில் நீர்வரத்து 881 கனஅடியாக உயர்ந்திருக்கிறது.
x
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை 313 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நீர்வரத்து 881 கன அடியாக உயர்ந்துள்ளது.மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கலாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அணையின் நீர்வரத்தைவிட நீர் வெளியேற்றம் அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் தற்போது குறையத் தொடங்கியிருக்கிறது. டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக தற்போது அணையில் இருந்து 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.77 அடியாகவும், நீர்வரத்து 881 கன அடியாகவும் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்