பார்சலில் எச்சில் தடவுவதால் பரவும் கொரோனா - உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

உணவகங்களில் உணவுப் பொருட்களை பார்சல் செய்யும்போது, எச்சிலை பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
x
உணவகங்களில் உணவுப் பொருட்களை பார்சல் செய்யும்போது, எச்சிலை பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களை பார்சல் செய்யும் போது, எச்சிலை பயன்படுத்துவதாலும், கவர்களை திறக்க ஊதுவதாலும், கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இதனை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தபோது, உணவுப் பொருட்களை பார்சல் செய்யும் போது எச்சில் தடவுவது அல்லது ஊதுவதால், ஒருவரிடம் இருந்து நூறு பேருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த மனு மூலம் நல்ல யோசனை தெரிவித்துள்ளதாக, மனுதாரரை பாராட்டிய நீதிபதிகள்.. 

உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகளில்,   விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்