தமிழகத்தில் 31% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி

தமிழகத்தில் கொரோனோவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டோர், 31 சதவிகிதத்தில் இருந்து 23 சதவிகிதமாக குறைந்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
x
தமிழகத்தில் கொரோனோவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டோர், 31 சதவிகிதத்தில் இருந்து 23 சதவிகிதமாக குறைந்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறித்த 2-ஆம் கட்ட செரோ ஆய்வு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தலைமையில்  நடத்தப்பட்டது. 

இதில், சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகம் பாதித்த 765 இடங்களில், 22 ஆயிரத்து 905 பேரிடம் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

பெறப்பட்ட மாதிரிகள் சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி மற்றும் கோவை ஆகிய 6 இடங்களில் உள்ள பரிசோதனை மையங்களில் ஆய்வு செய்யப்பட்டது. 

இதன் முடிவுகள் தற்போது வெளியான நிலையில், 22 ஆயிரத்து 905 நபர்களில், 5 ஆயிரத்து 316  பேர், அதாவது  23 சதவீதத்தினருக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 49% பேருக்கும், குறைந்தபட்சமாக நாகை மாவட்டத்தில் 9% பேருக்கும் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது. 

முன்னதாக கடந்தாண்டு ஆகஸ்ட்  மாதம் நடந்த முதற்கட்ட செரோ ஆய்வில், தமிழகத்தில் 31 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

முதற்கட்ட ஆய்வில் 31 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருந்த நிலையில், அது தற்போது 23 சதவிகிதமாக குறைந்து உள்ளது, 

தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் அடையாத, மார்ச் மாதத்திற்கு முன்னரே ஆய்வு மேற்கொண்டு தான் நோய் எதிர்ப்பு சக்தி குறைய காரணம் என்றும்,...

தொடர்ந்து வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் இந்த ஆய்வு நடத்தப்படும் என்றும், சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

2-ஆம் கட்ட செரோ ஆய்வில், தமிழகத்தில் உருமாறிய டெல்டா கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்