ஊரடங்கு தளர்வு அமல்;வாடிக்கையாளர்கள் வருகை இல்லை - புலம்பும் வாகன பழுது நீக்கும் தொழிலாளர்கள்

ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும், வாடிக்கையாளர்கள் வருகை இல்லாததால், புதுப்பேட்டை வாகன பழுது நீக்கும் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
x
ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும், வாடிக்கையாளர்கள் வருகை இல்லாததால், புதுப்பேட்டை வாகன பழுது நீக்கும் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இருசக்கர, நான்கு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கும் பணிகளுக்கு சிறப்பு வாய்ந்த இடமாகக் கருதப்படுவது புதுப்பேட்டை. சென்னையின் முக்கிய இடமாகக் கருதப்படும் இந்தப்பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. ஊரடங்கு தளர்விற்குப் பிறகு, இந்தக் கடைகள் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று காலை முதல் கடைகளில் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வாகனப் பழுதிற்கு வாடிக்கையாளர்கள் யாரும் வராததால், வியாபாரிகளும் தொழிலாளர்களும் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர். அரசு கடைகளைத் திறக்க அனுமதி அளித்திருந்தாலும், பணிக்கு செல்பவர்களைத் தவிர வேறு யாரும் வெளியில் செல்ல அனுமதி இல்லை என்பதால், வாடிக்கையாளர் வருகை கடுமையாகக் குறைந்துள்ளதாக புதுப்பேட்டை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால், கடை வாடகை மற்றும் கடனைத் திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்