கொரோனா அலையில் சிக்கிய சர்க்கஸ் தொழில் - வாழ்வாதாரமின்றி தவிக்கும் சர்க்கஸ் கலைஞர்கள்

சிவகாசி அருகே சர்க்கஸ் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
x
சிவகாசி அருகே சர்க்கஸ் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். 

நேபாள நாட்டை பூர்விகமாக கொண்ட சர்க்கஸ் கலைஞர்கள், தமிழ்நாட்டில் கிராமங்கள் தோறும் சென்று சர்க்கஸ் கூடாரங்கள் அமைத்து மக்களை மகிழ்வித்து வந்தனர். கதிரேசன் என்பவர் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர், சிவகாசி அருகே நாராயணபுரம் கிராமத்திற்கு  வந்தனர். ஆனால், கொரோனா அலையில் சிக்கி, சர்க்கஸ் கூடாரம் அமைத்து தொழில் நடத்த முடியாமல், வருமானமின்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு நாராயணபுரம் கிராம மக்கள், தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். ஒட்டகம், குதிரை, நாய், குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்கு கூட உணவு வழங்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். சர்க்கஸ் கூடாரங்கள் அமைக்க தேவையான உபகரணங்கள், இருக்கைகள் அனைத்தும் வெயில், மழையில் வீணாகி வருகின்றன. உடலை வில்லாக வளைத்தும் வனவிலங்குகள் மூலமாகவும் சர்க்கஸ் சாகச வித்தைகள் செய்து காட்டி அனைவரையும் சந்தோசப்படுத்தும் சர்க்கஸ் கலைஞர்களின் சோகத்தை தீர்க்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்