சுகாதார ஆய்வாளர் மகனை காட்டிக் கொடுத்த காய்கறி வியாபாரி - வியாபாரியின் கடைக்கு சீல் சுகாதார ஆய்வாளர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஊரடங்கு விதிமுறைகளை மீறி விளையாடிய மகனை காட்டிக் கொடுத்த காய்கறி வியாபாரியின் கடையை பூட்டி சுகாதார ஆய்வாளர் சீல் வைத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
x
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஊரடங்கு விதிமுறைகளை மீறி விளையாடிய மகனை காட்டிக் கொடுத்த காய்கறி வியாபாரியின் கடையை பூட்டி சுகாதார ஆய்வாளர் சீல் வைத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டையில் உள்ள கொரோனா சிகிச்சை மையம் அருகில் இளைஞர்கள் சிலர், விளையாடுவதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற போலீசார், இளைஞர்களை  எச்சரித்து அனுப்பினர். மேலும், அவர்களது இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதில் பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியம் என்பவரது மகனின் இருசக்கர வாகனமும் அடங்கும். இந்நிலையில் தனது மகனை காய்கறி கடை வைத்திருக்கும் பக்ருதீன் என்பவர் தான் காட்டிக் கொடுத்தார் என்று எண்ணிய ஆரோக்கியம், அவரது காய்கறி கடையை விதிகளை மீறியதாக கூறி பூட்டி சீல் வைத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்