மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமித்து, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
x
மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமித்து, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 
அதன்படி, மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணை தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
முழு நேர உறுப்பினராக பேராசிரியர் ராம 
ஸ்ரீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
அதே போன்று, பகுதி நேர உறுப்பினர்களாக 8 பேரை நியமித்து 
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
 
மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா, மருத்துவர் அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
பேராசிரியர்கள் ம.விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
மேலும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனபந்து, நர்த்தகி நடராஜ், மல்லிகா சீனிவாசன் ஆகியோரும் பகுதிநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த குழுவானது இலக்கு நிர்ணயிப்பு, கண்காணிப்பு மதிப்பீடு மற்றும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்

Next Story

மேலும் செய்திகள்