கோயில்களை புணரமைக்கும் பணி - அமைச்சர் சேகர்பாபு தகவல்

தமிழகத்தில் திருப்பணிகளை நடத்த வேண்டிய கோயில்களுக்கு அதற்கான பணிகளை தொடங்க வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டுள்ளதால், கோயில்களை புணரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் திருப்பணிகளை நடத்த வேண்டிய கோயில்களுக்கு அதற்கான பணிகளை தொடங்க வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டுள்ளதால், கோயில்களை புணரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலை துறை அமைச்சர்  சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய அவர், வடபழனி முருகன் கோயில் பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு வசதிகள் செய்யப்படுமென கூறினார். மேலும், தேவை ஏற்பட்டால் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்