27 ஐ.பி.எஸ் உள்பட46 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 27 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்பட 46 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
27 ஐ.பி.எஸ் உள்பட46 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
x
தமிழகத்தில் 27 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்பட 46 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் மற்றும்  ஐ.பி.எஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 27 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்பட 46 காவல்துறை அதிகாரிகள்  பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை சிபிசிஐடி சைபர் குற்றப்பிரிவு எஸ் பி ஆக இருந்த  சிபி சக்கரவர்த்தி திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இதேபோல் சைபர் கிரைம் பிரிவு எஸ் பி ஆக இருந்த  சுதாகர் காஞ்சிபுரம் மாவட்ட எஸ் பி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

காத்திருப்போர் பட்டியலில் இருந்து வந்த பெரோஸ் கான் அரியலூர் மாவட்ட எஸ் பி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

சென்னை அமலாக்கத்துறையின் எஸ் பி ஆக இருந்து வந்த மணி பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் அல்லாடி பள்ளி பவன் குமார் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி ஆகவும், மூர்த்தி திருச்சி மாவட்ட எஸ்பி ஆகவும் , ஓம்பிரகாஷ் மீனா ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்  காத்திருப்போர் பட்டியலில் இருந்து வந்த சசிமோகன் ஈரோடு மாவட்ட எஸ்பி ஆகவும் தென்காசி மாவட்ட எஸ்பி ஆக இருந்து வந்த சுகுணா சிங் மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
சென்னை போதைப்பொருள் தடுப்பு சிஐடி பிரிவு எஸ்பியாக இருந்து வந்த கலைச்செல்வன் தர்மபுரி மாவட்ட எஸ்பி ஆகவும் கடலூர் மாவட்ட எஸ்பி ஆக இருந்து வந்த ஸ்ரீ அபிநவ சேலம் மாவட்ட எஸ்பி ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 27 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்பட 46 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்