"பன்னிரென்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து"

கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் இந்த ஆண்டு பன்னிரென்டாம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படமாட்டாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
x
"பன்னிரென்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து" 

கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் இந்த ஆண்டு பன்னிரென்டாம் வகுப்பு பொது தேர்வு  நடத்தப்படமாட்டாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க  போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மாணவர்களின் கல்வியிலும் , பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை கொண்ட தமிழக அரசு , பொது தேர்வுகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் கலந்து ஆலோசித்து  தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொது தேர்வை ஒன்றிய அரசு  ரத்து செய்தது போல் பல்வேறு மாநிலங்களும் பன்னிரென்டாம் வகுப்பு பொது தேர்வுகளை ரத்து செய்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக பல்வேறு தரப்பினரிடமும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் கருத்துகள் கவனமுடன் கேட்டறியப்பட்டதாகவும், அனைத்து தரப்பினரும் மாணவர்களின் உடல் மற்றும் மன நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த இயலும் என்ற நடைமுறையால் அதற்கு குறைவான வயதுள்ள மாணவர்களை தேர்வு எழுத ஒரே நேரத்தில் வர செய்வது தொற்றை அதிகரிக்க செய்யலாம் என்று வல்லுனர்கள் அறிவுரை வழங்கியுள்ளதாகவும்  முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளின்படி தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மாணவர்களுக்கு எவ்வாறு  மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய உயர் அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களை  கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில்  அகில இந்திய அளவில் நீட் போன்ற நுழைவு தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று மாநில அரசு கருதுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.இதனால் உயர்கல்விக்காக நடத்தப்படும் பல்வேறு நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய  வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தாம் கடிதம் எழுதியுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்