குறையாத தொற்று... 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு

கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய பணிகளுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன....
x
தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறையாத நிலை உள்ளது. 

 இதனை அடிப்படையாக வைத்து இந்த 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 அதன்படி தனியாக செயல்படும் மளிகை, பல சரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன்விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 

 காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
 
மீன்சந்தைகள் மற்றும் இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் 
 
சார் பதிவாளர் அலுவலகங்கள் நாளொன்றுக்கு 50 சதவீதம் டோக்கன்களை வழங்கி பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. 

 தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்