தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் - மீண்டும் தடுப்பூசி பற்றாக்குறை சூழல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்துள்ள நிலையில், மீண்டும் தடுப்பூசி தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் - மீண்டும் தடுப்பூசி பற்றாக்குறை சூழல்
x
தமிழக அரசு, தடுப்பூசி செலுத்தும் பணியை நிறுத்தும் நிர்பந்தம் ஏற்படவிருந்த நிலையில் மத்திய அரசு கடந்த 1-ம் தேதி, 4 லட்சத்து 95 ஆயிரத்து 570 தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது.அந்த தடுப்பூசிகள் அனைத்தும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே போடப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், முன்பு கையிருப்பில் இருந்த தடுப்பூசிகளுடன் சேர்த்து 6.50 லட்சம் தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.அன்றைய தினம் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்பட 98 ஆயிரத்து 183 பேர் தடுப்பூசி செலுத்தியிருந்தனர்.ஜூன் 2-ம் தேதி தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 870 ஆக குறைந்திருந்த நிலையில்,ஜூன் 3-ம் தேதி எண்ணிக்கை 2.89 லட்சமாக அதிகரித்து உள்ளது.  இதனால் தமிழகத்தில் 3 நாட்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 4.42 லட்சமாக உயர்ந்துள்ளது. தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பு இருந்தாலும், அது விரைவில் தடுப்பூசி தீர்ந்துவிடும்.இதற்கிடையே தமிழக அரசின் வலியுறுத்தலை அடுத்து ஜூன் 15-30 கால கட்டத்துக்கு 18.36 லட்சம் தடுப்பூசிகள் வினியோகிக்கப்படும் என மத்திய அரசு கூறியிருக்கிறது. தடுப்பூசி கையிருப்பு காலியாக கூடிய நிலையில், தமிழக அரசு நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முயற்சித்து வருகிறது. மாநிலத்திற்கு வரும் 6-ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சுகாதாரத்துறை தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்