ஊரடங்கால் தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக கொரோனாவின் 2-வது அலை தணிந்து வருகிறது. 10 நாட்களில் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் அதிகமாக குறைந்திருக்கிறது.
x
தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக கொரோனாவின் 2-வது அலை தணிந்து வருகிறது. 10 நாட்களில் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் அதிகமாக குறைந்திருக்கிறது. 


கொரோனா 2-வது அலை பரவல் தமிழகத்தையே ஆட்டிபடைத்து கொண்டிருந்த நிலையில், கடந்த மே மாதம் 24-ம் தேதி தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  

அப்போது தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும், கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரையில் பாதிப்பு கணிசமாக உயர்ந்து கொண்டே இருந்தது.

இதனையடுத்து முழு ஊரடங்கை ஜூன் 7-ம் தேதி வரையில் அரசு நீட்டித்தது. இரண்டு வார முழு ஊரடங்கில் பெரும்பாலான மாவட்டங்களில் கணிசமாக பாதிப்பு குறைந்து வருகிறது.  

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 24-ஆம் தேதி கொரோனாவுக்கு 34 ஆயிரத்து 867 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 404  பேர் உயிரிழந்தனர்.

இதுவே ஜூன் 3-ஆம் தேதி பாதிப்பு 24 ஆயிரத்து 405 ஆகவும், உயிரிழப்பு 460 ஆகவும் பதிவாகியுள்ளது.

மே 24 முதல் ஜூன் 3 வரையில்10 நாட்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் அதிகமாக குறைந்திருக்கிறது.

மே 24 முதல் 30 வரையில் 7 நாட்களில் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 369 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட   நிலையில் 2 ஆயிரத்து 882 பேர் உயிரிழந்தனர்

இதுவே மே 31 முதல் ஜூன் 3 வரையில் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 171 ஆக பதிவாகியுள்ளது. உயிரிழப்பு ஆயிரத்து 911 ஆக பதிவாகியிருக்கிறது.

மாநிலத்தில் பாதிப்பு கணிசமாக குறைந்து இருந்தாலும் உயிரிழப்பு 450-ஐ தாண்டியே செல்கிறது. இதுவரையில் கொரோனாவுக்கு 25 ஆயிரத்து 665 பேர் உயிரிழந்த நிலையில்,

கடந்த 10 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 793 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பதை புள்ளி விபரங்கள் காட்டுகிறது..

Next Story

மேலும் செய்திகள்