"தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் அதிகம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளோரை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளோரை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 70 படுக்கை வசதி கொண்ட தற்காலிக கோவிட் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் காந்தி ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட அனைத்து மருத்துவமனைகளும் மேம்படுத்தப்படும் என்று கூறினார்.  மேலும், கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்