நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு... நிதி ஆயோக் வெளியிட்ட பட்டியல்

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு குறியீட்டில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ஏழ்மை ஒழிப்பில் தேசிய அளவில் முதலிடத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
x
ஐ,.நாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள, நீடித்த வளர்ச்சிகான இலக்குகள் குறியீட்டு எண்களை, நிதி ஆயோக் மூன்றாவது ஆண்டாக வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் 17 இலக்குகள், 70 சிறிய இலக்குகள், 115 குறிகாட்டிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

100க்கு 75 புள்ளிகள் பெற்று, மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. 74 புள்ளிகளை பெற்றுள்ள தமிழகம் மற்றும் இமாச்சல பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளன. 72 புள்ளிகளுடன் ஆந்திரா மூன்றாவது இடத்தில் உள்ளது.

அசாம் 57 புள்ளிகளையும், ஜார்காண்ட் 56 புள்ளிகளையும், பீகார் 52 புள்ளிகளையும் பெற்று, கடைசி மூன்று இடங்களில் உள்ளன. அனைத்து மாநிலங்களும் சேர்த்து, இந்திய அளவிலான குறியீட்டு எண், 2019இல் 60ஆக இருந்து 2021இல் 66ஆக அதிகரித்துள்ளது.

வறுமை அளவு, பொருளாதார வளர்ச்சி விகிதம், கல்வி, மருத்துவ சேவைகள், ஊட்டச்சத்து குறைப்பாடுகள், பாலின சமத்துவம், சுற்றுச்சூழல், மின்சார விநியோகம், சாலைகளின் தரம் மற்றும் நீளங்கள், உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இலக்குகள், குறிகாட்டிகளின் அடிப்படையில் இது மாநில வாரியாக கணிக்கப்படுகிறது.

ஒட்டு மொத்த குறியீட்டில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகம், ஏழ்மை ஒழிப்பு இலக்கு பிரிவில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் 79 புள்ளிகளைப் பெற்று சண்டிகர் முதலிடத்தை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்