தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை - மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
x
வேடசந்தூர், திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

செஞ்சி, விழுப்புரம் 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஒன்றரை மணி நேரமாக பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழல் நிலவியது. 

தாராபுரம், திருப்பூர் 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கடந்த சில தினங்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இந்த மழையால் வெப்பம் தணிந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. 

ஆண்டிப்பட்டி, தேனி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்