"ஊடகவியலாளர் அனைவருக்கும் உதவித்தொகை" - தலைவர்கள் கோரிக்கை

"ஊடகவியலாளர் அனைவருக்கும் உதவித்தொகை" - தலைவர்கள் கோரிக்கை
x
ஊடகங்களின் செய்தியாளர்களை முறைப்படுத்தி, அரசு உதவித் தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசுக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்ததோடு, உதவித்தொகை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேசமயம், அரசு ஏற்பு அளித்திருக்கிற செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிறுவனங்களின் அடையாள அட்டை பெற்றிருக்கும் பணியாளர்கள் அனைவருக்கும் அரசு உதவித்தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


கொரோனா காலத்திலும் உயிரை துச்சமென நினைத்து பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கு, தமிழக அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அடையாள அட்டை இல்லாமல்தான் பெரும்பாலான பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை மூலமாகவோ, பத்திரிகையாளர்களின் நலனுக்காக பாடுபடும் சங்கங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ள குழுக்கள் மூலமாகவோ உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்