நாள்தோறும் அதிகரிக்கும் தொற்று - ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதியில் நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட தொற்று ஏற்பட்டு வருகிறது.
நாள்தோறும் அதிகரிக்கும் தொற்று - ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி
x
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதியில் நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் 180க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து தொடர் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பகுதிகளில் நாள்தோறும் கிருமி நாசினி தெளிப்பது போன்ற பணிகளை துப்புரவு பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் பொறுப்பற்ற செயல்களால் துப்புரவு பணியாளர் களுக்கும் தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் துப்புரவு பணியாளர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க, ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்